மாணவி பாத்திமா தற்கொலைக்கு நீதி கோரி மாணவர்கள் போராட்டம்

தற்கொலை செய்து கொண்ட பாத்திமா லத்தீப் ஆதரவாக மாணவர்களின் போராட்டம் நீடித்துள்ளது.
மாணவி பாத்திமா தற்கொலைக்கு நீதி கோரி மாணவர்கள் போராட்டம்
x
தற்கொலை செய்து கொண்ட பாத்திமா லத்தீப் ஆதரவாக மாணவர்களின் போராட்டம் நீடித்துள்ளது. ஐஐடி நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மாணவி ஃபாத்திமா லத்தீப், தற்கொலை தொடர்பாக, விசாரணை குழு அமைக்க வலியுறுத்தி ஐ.ஐ.டி நுழைவாயிலில் 'ஜிந்தா பார்' அமைப்பை சேர்ந்த மாணவர்கள், ஜஸ்டின் ஜோசப், மொய்தீன் இருவரும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில், இரவு 7 மணி அளவில் திடீரென சுமார் 40  மாணவர்கள் ஒன்று கூடி, மாணவி பாத்திமா லத்தீப்பின், புகைப்படம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது, டீன் எம்.எஸ்.சிவகுமார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் அங்கேயே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்