காரை திருட அதிநவீன கருவி... பணக்கார வெறியில் பலே திருடனான பரமேஸ்வரன்

குறுகிய காலத்தில் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் தென் மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட கார்களை திருடிய பலே திருடன் பரமேஸ்வரன் பிடிபட்டான்.
x
குறுகிய காலத்தில் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் தென் மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட கார்களை திருடிய பலே திருடன் பரமேஸ்வரன் பிடிபட்டான். கோவை பாப்பம்பட்டியை சேர்ந்த அண்ணாமலையின் ஆம்னி கார் திருட்டு போனது தொடர்பாக சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். காங்கேயம் பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட அவர்கள் , சோதனை சாவடியை கடக்க முயன்ற அந்த ஆம்னி காரை பறிமுதல் செய்த‌தோடு அதனை திருடி சென்ற மதுரையை சேர்ந்த பரமேஷ்வரனையும் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையில் கார் மெக்கானிக் வேலை கற்றுக்கொண்டு பின்னர் தமிழ்நாடு, ஆந்திரா , கேரளா, கர்நாடகா மற்றும் கோவாவில் கார்களை திருடி விற்றுவந்த‌தாக தெரிவித்துள்ளான். 

கார்களை திருடுவதற்காக 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிநவீன கருவியை அவன் வைத்திருந்த‌தும் விசாரணையில் தெரிய வந்த‌து. பெங்களூருவில் 118 கார்களை திருடியதற்காக கைது செய்யப்பட்ட பரமேஷ்வரனிடம் இருந்து அந்த அதி நவீன கருவியும் பறிமுதல் செய்யப்பட்டது. அண்மையில் ஜாமீனில் வெளிவந்த பரமேஷ்வரன், சூலூரில் கார் திருடியபோது பிடிபட்டுள்ளான். பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசை தென்னிந்தியாவின் பலே திருடனாக பரமேஷ்வரனை மாற்றியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்