"மின்னணு வடிவிலான வாகன ஆவணங்கள் செல்லும்"-மாநிலங்களவையில் நிதின் கட்கரி தகவல்

டிஜி லாக்கர் மற்றும் எம் பரிவஹன் மொபைல் செயலியில் இருக்கும் மின்னணு வடிவிலான லைசென்ஸ்,வாகன பதிவு ஆவணம்,பிட்னெஸ் மற்றும் பெர்மிட் போன்ற வாகன ஆவணங்கள் செல்லத்தக்கது என்றும், அவற்றை ஏற்றுக் கொள்ளலாம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மின்னணு வடிவிலான வாகன ஆவணங்கள்  செல்லும்-மாநிலங்களவையில் நிதின் கட்கரி தகவல்
x
மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அதில் மோட்டார் வாகனச் சட்டம் 1989 இல் திருத்தங்களை மேற்கொண்டு, அண்மையில் மத்திய அரசு அரசாணை வெளியிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து விதிகளை  அமல்படுத்தும் காவல் துறையினருக்கு தேவையான அறிவுறுத்தலை வழங்குமாறு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாகவும் அமைச்சர் கட்கரி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்