அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் - போதையில் இருந்த 4 பேர் கைது

டூவீலரை பேருந்து முந்திச் சென்றதால் ஆத்திரம்
அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் - போதையில் இருந்த 4 பேர் கைது
x
சென்னை இசிஆர் சாலையில் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்ற அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் இருந்து கடலூருக்கு மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலை வழியாக அரசு விரைவுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி 2 மோட்டார் சைக்கிளில் 4 இளைஞர்கள் வந்து கொண்டிருந்தனர். 4 பேரும்  மது அருந்தி இருந்த நிலையில் பேருந்து அவர்களை முந்திச் சென்றதால் ஆத்திரமடைந்த அவர்கள், பேருந்தை வழிமறித்து கல்வீசி தாக்கினர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும்  கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்