கரூர் : தொடர்ந்து 4 வது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை
கரூரில் தொடர்ந்து நான்காவது நாளாக தனியார் கொசுவலை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.
கரூரில் தொடர்ந்து நான்காவது நாளாக தனியார் கொசுவலை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. எண்பதுக்கும் மேற்பட்ட வருமானவரி துறை அதிகாரிகள் இரவு பகலாக தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையின் போது தொழிலதிபர் சிவசாமியின் வீட்டில் இருந்து 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள வரவு, செலவு கணக்கு மற்றும் வங்கி கணக்கை சரி பார்க்கும் பணி இன்று நடை பெற இருப்பதாக கூறப்படுகிறது.
Next Story