பட்டப்பகலில் காதலிக்கு கத்திக்குத்து - தப்பியோடிய இளைஞர் அதிரடி கைது

பட்டப்பகலில் வீடுபுகுந்து காதலியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் காதலிக்கு கத்திக்குத்து - தப்பியோடிய இளைஞர் அதிரடி கைது
x
பட்டப்பகலில் வீடுபுகுந்து காதலியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமூர் என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காதலி தனலட்சுமியுடன் பேசிக் கொண்டிருந்த சக்திவேல் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பியோடி உள்ளார். இதில் படுகாயமடைந்த தனலட்சுமி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தனலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் சிதம்பரம் தாலுகா போலீசார் சக்திவேலை கைது செய்தனர். ஏதோ சில காரணங்களை காட்டி தன்னை புறக்கணித்ததால் தனலட்சுமியை கொலை செய்ய முயன்றதாக, போலீசில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்