கொடைக்கானல் : மழையை பொருட்படுத்தாமல் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது.
கொடைக்கானல் : மழையை பொருட்படுத்தாமல் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. கொடைக்கானல் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பலத்த மழை பெய்த நிலையில் ஒரு வார காலமாக மழை ஓய்ந்திருந்தது. இந்நிலையில் காலை முதலே மேகமூட்டம் நிலவிய நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் நகரை ஒட்டி உள்ள அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், குதிரை சவாரி, சைக்கிள் சவாரி உள்ளிட்டவைகளை மேற்கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்