ஐ.ஐ.டி மாணவி தற்கொலை விவகாரம் : ஐ.ஐ.டி.க்கு எதிராக பல்வேறு அமைப்பினர் புகார்
சென்னை ஐஐடியில் கேரள மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை ஆணையர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.
சென்னை ஐஐடியில் கேரள மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை ஆணையர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தேகலான் பாகவி, கூடங்குளம் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆகியோர் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். மாணவியின் இறப்பு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும், விசாரணையை முறையாக நடத்த வேண்டும், ஐஐடியை அரசுடைமையாக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story

