திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பாதுகாப்பு வசதிகள் குறித்து அமைச்சர் ஆலோசனை

கார்த்திகை தீப திருவிழாவின் பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின் போது மலையின் மீது ஏற இரண்டாயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
x
திருவண்ணாமலையில் வரும் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறும் தீப திருவிழாவிற்கு சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கார்த்திகை தீப திருவிழாவிற்க்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தமிழகம் முழுவதிலும் இருந்து திருவண்ணாமலைக்கு டிசம்பர் 9 மற்றும் 10 ம் தேதிகளில் 2 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 8 ஆயிரத்து 500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.350 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும்,முக்கிய இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சேவர் ராமசந்திரன் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்