ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை : முடிவை வெளியிட இடைக்கால தடை நீட்டிப்பு

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 22ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை : முடிவை வெளியிட இடைக்கால தடை நீட்டிப்பு
x
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 22ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பதுரை வெற்றியை எதிர்த்து, தி.மு.க வேட்பாளர் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, ராதாபுரம் தொகுதியில் மறுபடியும் வாக்குகள் எண்ணப்பட்டன. இதனிடையே, மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தடை கோரி எம்.எல்.ஏ இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு, முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. மீண்டும் அந்த மனு நீதிபதி அருண்மிஸ்ரா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வருகிற 22 ஆம் தேதி வரை வெளியிட தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்