சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற கூலி தொழிலாளி

குத்து சண்டை வீரர்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என தங்க பதக்கம் வென்று நாடு திரும்பிய குத்துசண்டை வீரர் செந்தில் நாதன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற கூலி தொழிலாளி
x
குத்து சண்டை வீரர்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என தங்க பதக்கம் வென்று நாடு திரும்பிய குத்துசண்டை வீரர் செந்தில் நாதன் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் துபாய் அரசு சார்பில் 6வது சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் துபாயில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த   செந்தில்நாதன் கலந்துகொண்டு தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.பின்னர் தாயகம் திரும்பிய அவர் சென்னை வியசார்பாடியில் அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தங்கப்பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். கூலி வேலை செய்து கொண்டு குத்துச்சண்டையில் பங்கேற்கும் தமக்கு மத்திய, மாநில அரசு வேலை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்