"அரிசி ராஜா" காட்டு யானையை பிடிக்க தீவிரம்

பொள்ளாச்சி அருகே 4 பேரை கொன்ற அரிசி ராஜா காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் 3-வது நாளாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
x
பொள்ளாச்சி அருகே 4 பேரை கொன்ற அரிசி ராஜா காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் 3-வது நாளாக தீவிரமாக  ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் நவ மலைப்பகுதியில் 
சுற்றி திரிந்த அரிசி ராஜா என்ற காட்டு யானை சேத்துமடையை சேர்நத பிச்சைமுத்து ரஞ்சனா என்ற சிறுமி உள்ளிட்ட 4 பேரை கொன்றது. அந்த யானை தாக்கி 7 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து அரிசி ராஜா காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக  டாப்சிலிப் அருகே உள்ள வரகளியாறு முகாமிலிருந்து பாரி, மற்றும் கலீம் என்றய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை அர்த்தனாரிபாளையம் பெருமாள் கோயில் அருகே வந்த அரிசி ராஜா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்ற போது வனத்துறையினருக்கு போக்குகாட்டி அங்கிருந்து யானை தப்பி வனபகுதிக்குள் சென்று மறைந்தது. 

மலை அடிவார வனப்பகுதியில் முகாமிட்டுள்ள அரிசி ராஜா யானையை கண்டுபிடிக்க அதிநவீன  டிரோன் காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினர்,  வேட்டை தடுப்பு காவலர் என  70-பேர் அரிசி ராஜா யானையை பிடிக்கும் முயற்சியில் 3-வது நாளாக ஈடுபட்டுள்ளனர். வனபகுதி அருகில் உள்ள அர்த்தனாரிபாளையம் ஆண்டியூர், பருத்தியூர்  ஆகிய கிராம மக்கள் மாலையில் வெளியே நடமாடவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ள

Next Story

மேலும் செய்திகள்