தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன : உதகை மலை ரயில் சேவை ரத்து
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு பெய்த மழை காரணமாக ஷில்குரோ மற்றும் அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் சென்றது.
Next Story

