மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவத்தில் விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு
x
சத்தியமங்கலத்தை அடுத்த  தாளவாடி அருகே மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது தொடர்பாக முதியனூர் கிராமத்தை சேர்ந்த மாதேவசாமி என்ற விவசாயி கைது செய்யப்பட்டார். அவர் தனது நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்து அதில் 
உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சியதாக கூறப்படுகிறது. 
இதில் சிக்கி  பெண் யானை ஒன்று உயிரிழந்ததால்,  மாதேவசாமியை வனத்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்