சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலுக்கு ஜாமீன்

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் 12 தேதி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்து லாரி ஏறி உயிரிழந்தார்.   இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 27ல் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தமக்கு ஜாமீன் கோரி ஜெயகோபால் 2வது முறையாக மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி கார்த்திகேயன் முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது, 45 நாட்களுக்கும் மேலாக மனுதாரர்கள் சிறையில் இருப்பதாகவும், எந்த நிபந்தனை விதித்தாலும் பின்பற்ற மனுதாரர் தயாராக இருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதா என நீதிபதிகள் கேட்டனர், அதற்கு , குற்றப்பத்திரிகை பரிசீலனையில் இருப்பதாக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயகோபாலுக்கும், மேகநாதனுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.மேலும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில்,  சென்னை கேன்சர் மருத்துவமனைக்கும், ஸ்டான்லி மருத்துவமனைக்கும்  தலா 25 ஆயிரம் ரூபாயை வழங்க ஜெயகோபாலுக்கு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்