மக்களை அச்சுறுத்தும் 'அரிசி ராஜா' யானை

பொள்ளாச்சி அருகே 4 பேரை அடித்து கொன்ற சாப்பாட்டு ராமனான அரிசி ராஜா என்ற யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மக்களை அச்சுறுத்தும் அரிசி ராஜா யானை
x
அர்த்தனாரிபாளையம் அருகே கடந்த ஆறு மாதங்களாக முகாமிட்டுள்ள ஒற்றையானை, இதுவரை 4 பேரை கொன்றுள்ளது. இந்த யானை தாக்கியதில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அச்சுறுத்தி வந்த, இந்த யானையை பிடிக்க அர்த்தனாரிபாளையம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை ஏற்ற வனத்துறை, காட்டுயானை பிடிக்கும் முயற்சியில் தீவிரவமாக ஈடுபட்டுள்ளது.  இதற்காக வரகளியாறு யானைகள்முகாமில் இருந்து பாரி,கலீம்  ஆகிய இரண்டு யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஒற்றை காட்டுயானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடிக்கடி பாறைகள், அடர்ந்த செடிகளிடையே யானை மறைந்து கொள்வதால், அதை பிடிப்பது சற்று சவாலாக இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும், அந்த யானைக்கு பிடித்த, அரிசி, கால்நடை தீவனங்களை வைத்து, அரிசி ராஜாவை பிடிக்கவும் வனத்துறை திட்டமிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்