ரூ.71 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் : இருவர் கைது

சென்னை விமான நிலையத்தில், 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு குங்குமப் பூ மற்றும் 71 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரூ.71 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் : இருவர் கைது
x
துபாயில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது ஜாவித் என்பவர், அவசரமாக வெளியேற முயன்றுள்ளார். அவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது ஈரான் நாட்டு குங்குமப்பூ பாக்கெட்டுகள்  இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த அதிகாரிகள், 63 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 26 கிலோ குங்குமப்பூவை பறிமுதல் செய்தனர். இதேபோல, கேரளாவை சேர்ந்த அமீர் தேக்குல்லா கேண்டி, ஹரூன் நஹர் மோயத் ஆகியோரிடம் இருந்து 71 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள  ஒரு கிலோ 800 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்