பர்கூர் மலைப் பாதையில் திடீர் மண்சரிவு : 5 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலை பாதையில் மழை காரணமாக திடீர் மண்சரிவு ஏற்பட்டது.
பர்கூர் மலைப் பாதையில் திடீர் மண்சரிவு : 5 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு
x
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலை பாதையில் மழை  காரணமாக திடீர் மண்சரிவு ஏற்பட்டது. தமிழக - கர்நாடக பிரதான சாலையில் செட்டி நொடி என்ற இடத்தில் ஏற்பட்ட  மண்சரிவு காரணமாக அந்த பகுதியில் 5 மணி நேரம் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலம்  சரிந்த மண்ணை அப்புறப்படுத்தினர். பின்னர்  போக்குவரத்து சீரானது. அங்கு அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதாகவும் , அதை தடுக்க நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்