சேலம்: ஏரி உடைந்து கிராமங்களுக்குள் புகுந்தது தண்ணீர்

சேலம் அருகே ஏரி உடைந்து வெள்ளம் புகுந்ததால் 12 கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
x
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகர் முழுவதும் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சேலம் அருகேயுள்ள சேலத்தாம்பட்டி ஏரியின் கரை உடைந்ததால் சிவதாபுரம், பனங்காடு உள்ளிட்ட 12 கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. வீடுகளை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் தாழ்வான இடங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்