தஞ்சாவூர் : சனி பிரதோஷம் - நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

சனி பிரதோஷத்தை ஒட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சாவூர் : சனி பிரதோஷம் - நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
x
சனி பிரதோஷத்தை ஒட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர் சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால், நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 


திருவண்ணாமலை : சனி பிரதோஷம் - பக்தர்கள் சாமி தரிசனம்திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு,  ஐப்பசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு அரிசி மாவு, மஞ்சள் தூள், பஞ்சாமிர்தம், தயிர், பால் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சாமந்தி, மல்லி உள்ளிட்ட பல்வேறு மலர்களால் ஆன மாலைகள் அணிவிக்கப்பட்டு  சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.Next Story

மேலும் செய்திகள்