கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு : விளைநிலங்களுக்கு புகுந்த தண்ணீர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மில் மேடு என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மில் மேடு என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்டுள்ள 2300 கனஅடி தண்ணீர் அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் புகுந்தது. இதனால் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் மில்மேடு, கேத்தம்பாளையம் பகுதிகளில் உள்ள 50 வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
Next Story