மருத்துவ மாணவர்கள் 8 மணி நேர பணி கோரி வழக்கு : ரவீந்திரநாத் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு 8 மணி நேர பணி நேரத்தை அமல்படுத்த கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர்கள் 8 மணி நேர பணி கோரி வழக்கு : ரவீந்திரநாத் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
x
மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு, 8 மணி நேர பணி நேரம் நிர்ணயித்து தமிழக அரசு 2015ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்த‌து. இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவில், பணிச்சுமை காரணமாக மதுரையில் மருத்துவ மேற்படிப்பு மாணவர் உதயராஜ் தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். எட்டு மணி நேர பணி நேரத்தை அமல்படுத்தப்படுவதை கண்காணிக்கவும், அரசு மருத்துவர்கள் பிற பணிகளில் ஈடுபடுத்தப் படுவதை தடுக்கவும், உயர் மட்ட குழுவை அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்