சென்னையில் 2 மாதமாக போலீசுக்கு தண்ணி காட்டிய திருடன்...

சென்னை அடுத்த பம்மலில் , பல சவரன் தங்க நகைகளை திருடி விட்டு இரண்டு மாதம் சாவகாசமாக சுற்றி திரிந்த திருடனை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் 2 மாதமாக போலீசுக்கு தண்ணி காட்டிய திருடன்...
x
கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி , பம்மலில் வசிக்கும் பைனான்சியர் இமானுவேல் ஜெயசீலன் என்பவர் குடும்பத்துடன் சர்ச்சுக்கு சென்ற போது, வீட்டில் இருந்து115 சவரன் நகை மற்றும் 30 லட்சம் ரூபாய் திருடுபோனது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை பயன்படுத்திய போதிலும் மொபெட் எண் போலி என்பதால் திருடனை நெருங்க முடியவில்லை,  அதன்பின் திருட்டு நடந்த பகுதியில், பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை டிராக் செய்து, திருடன் கமுதியை சேர்ந்த ஜான் ஜோசப் என்பதை கண்டுபிடித்தனர். இந்நிலையில், சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள மாமியார் வீட்டில் , ஜான் ஜோசப் விருந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் ஜான் ஜோசப் பல இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது, 
 


Next Story

மேலும் செய்திகள்