ரூ. 2200 கோடி மோசடி என புகார் : நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட பாதிக்கப்பட்டவர்கள்

பண மோசடி செய்து விட்டதாக புகார் கூறி சிட் பண்ட் நிதி நிறுவன அலுவலகத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.
ரூ. 2200 கோடி மோசடி என புகார் : நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட பாதிக்கப்பட்டவர்கள்
x
பண மோசடி செய்து விட்டதாக புகார் கூறி சிட் பண்ட் நிதி நிறுவன அலுவலகத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர். கோவை பீளமேடு பகுதியில் இயங்கி வந்த சிட் பண்ட் நிறுவனம் ஒன்று, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் இரு தவணையாக 10 ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்கள் வழங்கப்படும் என்றும் 10 மாதங்களுக்கு பிறகு ஒரு லட்சம் ரூபாய்க்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்  என்றும் கூறி ஆயிரக்கணக்கானோரிடம்  பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. டெபாசிட் செய்தவர்களுக்கு ஆரம்பத்தில் பணம்  கொடுத்த நிலையில், பின்னர் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக போலீசில் புகார் அளித்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, ஓய்வு பெற்ற நீதிபதி பாட்ஷா தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கட்டிய பணம் திரும்ப கிடைக்கவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர். அங்கு வந்த போலீசார், உரிய புகார் அளிக்குமாறு அவர்களை அறிவுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்