திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம் : இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட திருவாரூர் கொள்ளையன் சுரேஷின் தாய் கனகவள்ளி, சுரேஷின் நண்பர் மணிகண்டன் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம் : இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் பல கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது , இந்த கொள்ளை சம்பவத்தில்  முக்கிய குற்றவாளியான முருகன் , சுரேஷ் , கணேசன் , மற்றும் நகைகளை பதுக்கி வைத்திருந்த மணிகண்டன், சுரேஷின் தாய் கனகவள்ளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மணிகண்டன், கனகவள்ளி தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், திருச்சி கோட்டை போலீசார் பரிந்துரைப்படி, இருவர் மீதும் தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்