திமுக பிரமுகர் இல்லத் திருமணத்தில் கொள்ளை :நகையை திருடியவர் கைது

சேலத்தில் திமுக பிரமுகர் இல்லத் திருமணத்தில் மண்டபத்தில் வைத்திருந்த நகைகளை திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
திமுக பிரமுகர் இல்லத் திருமணத்தில் கொள்ளை :நகையை திருடியவர் கைது
x
சேலத்தில் திமுக பிரமுகர் இல்லத் திருமணத்தில், மண்டபத்தில் வைத்திருந்த நகைகளை திருடிச்சென்ற நபரை, போலீசார் கைது செய்தனர். ஜாகிர் அம்மாபாளையம் அருகே உள்ள  திருமண மண்டபத்தில் கடந்த 31 -ம் தேதி, சூரமங்கலம் பகுதி திமுக பிரமுகர் சரவணன் இல்லத்திருமண விழா நடைபெற்றது. அப்போது, மணமகன் அறையில் வைத்திருந்த 32 சவரன் நகை திருடு போனது. விசாரணை நடத்திய போலீசார், நகைகளை திருடிய, சின்ன திருப்பதியை சேர்ந்த மகபூப் அலி என்பவரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்