"சினிமா வாய்ப்பு வழங்குவதாக கூறி இளம்பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொழில்"

சினிமா வாய்ப்பு வழங்குவதாக கூறி இளம்பெண்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய கும்பல் நெல்லூரில் சிக்கியுள்ளது.
சினிமா வாய்ப்பு வழங்குவதாக கூறி இளம்பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொழில்
x
சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக சிறுமி ஒருவர் அளித்த புகார், பூதாகரமாகியுள்ளது. சிறுமி  புகாரின் பேரில் 6 பெண்கள் உள்பட 14 பேர் கொண்ட பாலியல் கும்பல் போலீசார் வசம் சிக்கியது.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி., ஐஸ்வர்யா ரஸ்தோகி,  நெல்லூரில் 5 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில், பெண்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பலனாக, 6 பெண்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, கார், பைக், கணினி, 14 செல்போன்கள், 12 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்