"பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்" - வரும் திங்கள்கிழமை வெளியே வருவார் என எதிர்பார்ப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு, நிபந்தனைகளுடன் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் - வரும் திங்கள்கிழமை வெளியே வருவார் என எதிர்பார்ப்பு
x
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை  கைதிகளாக பேரறிவாளன் உள்பட 7 பேர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை, அல்லது அவர்களின் உறவினர் உடல்நிலை, வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சிறை விதிகளின் அடிப்படையில் பரோலில் சென்று வருகின்றனர். இந்த நிலையில்,  தமது தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, தமக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு பேரறிவாளன் விண்ணப்பம் செய்திருந்தார். அதனை ஆய்வு செய்த  தமிழக சிறைத் துறை, நிபந்தனை அடிப்படையில் ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து  வரும் திங்கட்கிழமையன்று பேரறிவாளன் பரோலில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்