விமான நிலையங்களில் தொடர்கதையாகி வரும் தங்க வேட்டை
திருச்சி மற்றும் சென்னை சர்வதேச விமான நிலையங்களில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
தங்கவேட்டை விமான நிலையம் என பெயர்மாற்றும் அளவுக்கு திருச்சி விமான நிலையத்தில் நாளுக்குநாள் தங்கம் பறிமுதல் அதிகாரித்து வருகிறது.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, 9 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சியும், அக்டோபர் 3ஆம் தேதி, 21 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கமும் பறிமுதல் ஆனது. அக்டோபர் 7ஆம் தேதி, 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம், கரன்சி, லேப்டாப் ஆகியவை பிடிபட்டன.
சென்னை விமான நிலையத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி, சவூதி அரேபியாவில் இருந்து முறுக்கு தயாரிக்கும் கருவியில் மறைத்து கடத்தி வந்த 21 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 555 கிராம் தங்கம் பறிமுதல், அக்டோபர் 4-ல் துபாயில் இருந்து உடலில் மறைத்து எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 762 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அக்டோபர் 6ஆம் தேதி மலேசியாவில் இருந்து வந்த பெண் உள்ளிட்ட இருவரிடம் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 24 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 620 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது.
அக்டோபர் 7ஆம் தேதி, துபாயில் இருந்து வந்த சென்னை பெண் சூட்கேஸ் கைப்பிடியில் மறைத்து வைத்திருந்த 22 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 595 கிராம் தங்கம் சிக்கியது
திருச்சியில், அக்டோபர்10 ஆம் தேதி, 28 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், 11ஆம் தேதி, 74 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், 12ஆம் தேதி, 7 லட்சத்து 38 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம், 15ஆம் தேதி, 55 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது.
அக்டோபர் 8 ஆம் தேதி, 65 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 650 கிராம் தங்கம் 11ஆம் தேதி 36 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 973 கிராம் தங்கம், 15ஆம் தேதி 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 525 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் அக்டோபர்17ம் தேதி, 57 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம், 19ஆம் தேதி, 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. 21ஆம் தேதி, 93 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம், 26ம் தேதி, 7 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், 31ஆம் தேதி, ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பிடிக்கப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் அக்டோபர் 18ஆம் தேதி, சிங்கப்பூர், துபாய், கொழும்புவில் இருந்து வந்த 9 பேர் உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ஒரு கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 678 கிராம் தங்கம் பறிமுதல் ஆனது.
19ஆம் தேதி துபாயில் இருந்து 36 லட்சம் மதிப்புள்ள 909 கிராம் தங்கம் பறிமுதலானது.
திருச்சி விமான நிலையத்தில், நவம்பர்1ஆம் தேதி, 78 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், நவம்பர் 5ஆம் தேதி, 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள, ஒரு லட்சம் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், அக்டோபர் 20 ஆம் தேதி 37 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 949 கிராம் தங்கம், 22ஆம் தேதி 7 பேரிடம் இருந்து 1 கோடியே 76 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ 444 கிராம் தங்கம் பறிமுதல் ஆனது.
அக்டோபர் 24ஆம் தேதி 6 பேரிடம் இருந்து 91 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 310 கிராம் தங்கம் நவம்பர் 5ஆம் தேதி துபாயில் இருந்து வந்த விமானத்தின் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 2 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ 600 கிராம் தங்கம் பறிமுதல் கைப்பற்றப்பட்டது.
திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில், அடுத்தடுத்து கோடிக் கணக்கில் கடத்தல் தங்கம், வெளிநாட்டு கரன்சி, சிகரெட் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
Next Story