கல்கி ஆசிரமும்... சொத்து குவிப்பு விசாரணையும்...

சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் கல்கி சாமியார் நேரில் ஆஜரானார்.
கல்கி ஆசிரமும்... சொத்து குவிப்பு விசாரணையும்...
x
சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில், கல்கி சாமியார் நேரில் ஆஜரானார். கடந்த 16 ஆம் தேதி முதல் 6 நாட்கள், கல்கி சாமியாருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தியபோது, 44 கோடி ரூபாய் இந்திய பணமும், 20 கோடி ரூபாய் வெளிநாட்டு பணமும் சிக்கியது. 4 ஆயிரம் ஏக்கர் நிலம் விற்பனை உட்பட ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப் பட்டன. கோடிக் கணக்கான ரூபாய் நன்கொடையை ரியல் எஸ்டேட், கட்டுமானம், விளையாட்டு துறைகளில் முதலீடு செய்ததும் வெளிநாட்டு நன்கொடையை குறைத்து காட்டி அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் நாடுகளில் முதலீடு செய்ததும் அம்பலமானது. 

இது குறித்து கல்கி சாமியாரின் மகன், கிருஷ்ணா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கல்கி சாமியார் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடந்தது. அவரிடமும் அவரது மகன் கிருஷ்ணாவிடமும் இன்னும் முழுமையாக விசாரணை நடத்தப்படும் என வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறையும் சம்மன் அனுப்ப உள்ளதாகவும் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்யப்படுவார் எனவும் அமலாக்கத் துறை எச்சரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்