நவ. 11 - ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னையில் வருகிற 11 ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
நவ. 11 - ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
x
சென்னையில் வருகிற 11 ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் தலைவர்  ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். வருகிற 10 ம் தேதி நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக திங்கட்கிழமை காலை 10. 30 மணி அளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அந்த அறிவிப்பில் அன்பழகன் குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து திமுகவும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருவது உறுதியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்