மான்களை பாதுகாக்கும் நோக்குடனே இடமாற்றம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

சென்னையில் வனப்பகுதி அல்லாத பகுதிகளில் வசிக்கும் மான்களை பாதுகாக்கும் நோக்குடனே, கிண்டியில் இருந்து அவை இடமாற்றம் செய்யப்படுவதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மான்களை பாதுகாக்கும் நோக்குடனே இடமாற்றம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு
x
* ராஜ்பவன், கிண்டி சிறுவர் பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற வளாகங்களில் ஆயிரத்து 500 மான்கள் உள்ளதாகவும், அவற்றை வேறு இடத்திற்கு மாற்ற தடை கோரி,  முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். 

* இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக வனத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

* அதில், மான்களை நாய்கள் கடிப்பதாலும், வாகனங்களால் அடிக்கடி விபத்துகளில் சிக்கி மான்கள் இறப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மேலும், பிளாஸ்டிக் மற்றும் கழிவு நீரை குடிப்பதால் ஏராளமான மான்கள் உயிரிழப்பதால், பாதுகாப்பு கருதி வனப்பகுதிக்கு மாற்றியதாக தெரிவிக்கப்பட்டது.

* இதையடுத்து தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல்  சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்