துணை மருத்துவ படிப்பில் முறைகேடு : தேர்வுத்துறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

நீட் ஆள்மாறாட்ட விவகாரம் கிளப்பிய புயல் இன்னும் ஓயாத நிலையில், துணை மருத்துவ படிப்பு சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துணை மருத்துவ படிப்பில் முறைகேடு : தேர்வுத்துறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை
x
நீட் ஆள்மாறாட்ட விவகாரம் கிளப்பிய புயல் இன்னும் ஓயாத நிலையில், துணை மருத்துவ படிப்பு சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்த நீட் ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், துணை மருத்துவ படிப்பான மருந்தாளுநர் சேர்க்கையில், இடஒதுக்கீட்டை விட கூடுதலாக 5 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 தனியார் கல்லுாரிகளில், தலா 1 மாணவர் என 5 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இது குறித்து எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தலைமையிலான குழு, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. எம்.பி.பி.எஸ் படிப்பை தொடர்ந்து, துணை மருத்துவ படிப்புகளிலும் முறைகேடு நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்