வெங்காயம் பதுக்கினால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

வெங்காய விலை உயர்ந்து வரும் நிலையில், அதை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெங்காயம் பதுக்கினால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை
x
வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி,  சில்லரை விற்பனையாளர்கள் பத்து மெட்ரிக் டன்னுக்கு மேல் கையிருப்பு வைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மொத்த விற்பனையாளர்கள் ஐம்பது மெட்ரிக் டன்னுக்கு மேல் பதுக்கி வைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு வெங்காயம் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய தமிழகம் முழுவதும் அரசு அலுவலர்கள் அடங்கிய பல்வேறு குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 



மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் இருந்து மொத்த விலைக்கு வெங்காயம் கொள்முதல் செய்திடவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்தை தமிழகத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மக்களுக்கு விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்