திருச்சி பெல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? - விசாரணை தொடக்கம்

திருச்சி பெல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர், ஏற்கனவே வெறொரு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
x
திருச்சி பெல் கூட்டுறவு வங்கியில், கடந்த 31ஆம் தேதி இரவு, 1 கோடியே 43 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது. இதையடுத்து வங்கி ஊழியர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்தும், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி இரவு, திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நடைபெற்ற ஒரு கொள்ளை முயற்சியின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கொள்ளையன் வீட்டின் ஜன்னலை உடைத்து, கொள்ளையடிக்க முயன்று தோல்வி அடைந்தது, திரும்பி சென்றுள்ளார். இதன் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த நிலையில், புதூரில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் தான், பெல் வங்கியிலும் கொள்ளையடித்து இருப்பாரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்