"அபராத ரசீதில் தமிழ் இடம்பெறவில்லை": திமுக போராட்டம் நடத்தும் - ஸ்டாலின் அறிவிப்பு

போக்குவரத்து காவல்துறை வழங்கும் அபராத ரசீதில், தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
x
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து போலீசார் வழங்கும் ரசீதில், அவரவர் தாய் மொழி, மற்றும் ஆங்கிலம் இடம் பெற்றிருக்கும். தமிழகத்தில் அப்படி இருந்த நிலையில், கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல், போக்குவரத்து போலீசார் வழங்கிய அபராத ரசீதில், தமிழ் நீக்கப்பட்டு, இந்தி மற்றும் ஆங்கிலம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து  கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அபராத ரசீதில் தமிழ் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். அந்த ரசீதியில் மீண்டும் தமிழ் இடம் பெறவில்லை என்றால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்