"கடல் சார் ஆய்வுகளில் தமிழகம் முன்னோடி" - வெங்கையா நாயுடு

நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கடல் நீரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
x
சென்னையில் நடைபெற்ற தேசிய கடல்சார் தொழில் நுட்ப கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்,  சுற்றுச்சூழல் கள ஆராய்ச்சியில், கடற் சார்ந்த ஆய்வுகள் முக்கியமானவை என்று தெரிவித்தார். கடல் சார்ந்த ஆய்வுகளில் தமிழகம் முன்னோடியாக திகழ்வதாகவும், சோழர்கள் மற்றும் பல்லவ மன்னர்கள் நாடு கடந்து வாணிபம் செய்து சாதனை படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கடல் நீரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு கூறினார். இயற்கையோடும் கலாச்சாரத்தோடும் சேர்ந்து உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட  அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள தேவையான தொழில்நூட்பங்கள் உருவாக்கிட வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்