"பொள்ளாட்சி வழக்கில் கைதானவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து - தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம்"

பொள்ளாட்சி வழக்கில், கைதானவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பொள்ளாட்சி வழக்கில் கைதானவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து - தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம்
x
பொள்ளாட்சி வழக்கில், கைதானவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோவை மாவட்ட ஆட்சியர், காவல்துறையின் அலட்சியம், பொள்ளாச்சி வழக்கின், போக்கையே மாற்றும் ஆபத்தாக மாறியிருக்கிறது என்று கூறினார்.  இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசு மீது ஏற்கனவே ஏற்பட்டுள்ள சந்தேகம் வலுப்பெற்று விடும் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இளம்பெண்களின் எதிர்காலத்தைச் சீரழித்தவர்களை, தயவு தாட்சண்யமின்றி சட்டத்தின் முன்பு நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்