பாடி : அரசு பேருந்து விபத்துக்கு பணி சுமையே காரணமா..?

சென்னை அருகே பாடியில், கண்டெய்னர் லாரி மீது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில், 3 பெண்கள் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
x
சென்னை அருகே பாடியில், கண்டெய்னர் லாரி மீது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில், 3 பெண்கள் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து, தாதங்குப்பம் என்ற இடத்தில் அதிகாலை 3 மணி அளவில் நடைபெற்றது. ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு போக்குவரத்துக்கழக பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் கோவிந்தசாமி என்பவரின் கால் நசுங்கி விட்டது. நடத்துநர் வீரமுத்து, நிகழ்விடத்தில் உயிரிழந்தார். கண்டெய்னர் லாரி டிரைவர், தப்பி ஓடி விட்டார். அரசு பேருந்து
டிரைவர், தூக்க கலக்கத்தில் இருந்தாரா, என போக்குவரத்து புலனாய்வு போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்துக்கு பணி சுமையே காரணம் என உயிரிழந்த நடத்துநரின் உறவினர் கனகராஜ் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்