டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

டெங்கு காய்ச்சலை தடுக்க எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
x
டெங்கு காய்ச்சலை தடுக்க எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரபாகவும் அவர் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனுக்கள் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கடவுளுக்கு அடுத்தபடியாக கருதப்படும் மருத்துவர்கள், எப்படி ஏழை மக்களுக்கு சிகிச்சை வழங்க முடியாது என மறுக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். குப்பைகள் அகற்றப்படாததால் டெங்கு நோய் பரவுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், முதலமைச்சரின்  வீட்டின் அருகே மலைபோல குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும், முதல்வர் வீட்டு அருகில் இந்த நிலை என்றால், மற்ற இடங்கள் எப்படி இருக்கும் என கற்பனை செய்ய முடியும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.  விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்