திருச்சியில் கூடியது காவிரி ஒழுங்காற்று குழு

காவிரி ஒழுங்காற்று குழுவின் 19வது கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்று வருகிறது.
x
டெல்லி மற்றும் பெங்களூருவில் இதுவரை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், முதல் முறையாக தமிழகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில், காவிரி ஒழுங்காற்று குழு தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான நவீன்குமார் தலைமையில், அதிகாரிகள் 16 பேர் பங்கேற்றுள்ளனர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மாலை, 4 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர், பருவ மழைப் பொழிவு, அணைகளில் நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்