நீட் முறைகேடு : கைரேகை பட்டியல் ஒப்படைப்பு

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மாணவர்களின் கைரேகை அடங்கிய பட்டியல் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீட் முறைகேடு : கைரேகை பட்டியல் ஒப்படைப்பு
x
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மாணவர்களின் கைரேகை அடங்கிய பட்டியல் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களில் பலர் நீட் தேர்வில் முறைகேடு செய்த  விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது . அதன்படி, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சென்னை மாணவர் , தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பல மாணவர்கள் முறைகேடாக சேர்ந்ததும்  தெரியவந்தது. இந்த சூழலில் மேலும் பல மாணவர்கள் முறைகேடான செயலில் ஈடுபட்டு மருத்துவ படிப்பை படித்து வருகிறார்களா என்பதை கண்டுபிடிக்க, மருத்துவ கல்வி இயக்குனரகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதன்படி, நடப்பாண்டு எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த 4 ஆயிரம்  மாணவர்களின் கைரேகைகளை மருத்துவ கல்வி இயக்குனரகம் சமீபத்தில் பெற்றது. 

மேலும் இந்த மாணவர்கள் அனைவரும் ஏற்கனவே நீட் தேர்வின் போது தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் இடம் கைரேகைகளை வழங்கியுள்ளனர். தேசிய தேர்வு முகமையிடம் இருந்து, மாணவர்களின் கைரேகை பட்டியலையும் மருத்துவ கல்வி இயக்குனரகம் பெற்றுள்ளது. அந்த பட்டியலையும், மருத்துவ கல்வி இயக்குனரகம் பெற்ற பட்டியலையும் சிபிசிஐடி போலீஸாரிடம் மருத்துவக் கல்வி இயக்குனரகம் ஒப்படைத்துள்ளது. தற்போது இரண்டு பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்த்து கை ரேகைகள் ஒத்துப் போகிறதா? , அதில் முரண்பாடுகள் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதன் முடிவில், முறைகேடு பட்டியல் மேலும் வெளியாகுமா என்பது தெரிய வரும்.

Next Story

மேலும் செய்திகள்