நவ.1ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்

நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தலைமைச்செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நவ.1ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்
x
நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தலைமைச்செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என  கடந்த ஜூலை மாதம் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கிழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அறிவித்தார்.  இந்நாளை கொண்டாட பத்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி கடந்த 21 தேதி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனையடுத்து தலைமைச்செயலக வளாகத்தில் உள்ள சட்டபேரவை, நுழைவாயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 தேதி அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், இணையோர் அரங்கம் உள்ளிட்ட  நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்