பல்லாவரம் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக பாலம்

சென்னை பல்லாவரம் அருகே அடையாறு ஆற்றில் தரைப்பாலம் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
x
சென்னை பல்லாவரம் அருகே அடையாறு ஆற்றில் தரைப்பாலம் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சென்னை பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை பகுதியில் திருமுடிவாக்கம் சாலையில் 2 கோடியே 63 லட்சம் செலவில் அடையார் ஆற்றில்  பாலம்  கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தற்காலிக தரைப்பாலம் ஒன்று போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பெய்த மழையில் தரைப்பாலம் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பலரும் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து மழை பெய்வதால் தரைப்பாலத்தை சீரமைக்க முடியாத நிலை உள்ளதாகவும், மாற்றுப்பாதையை மக்கள் பயன்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்