நோயாளிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் - கோமாவுக்கு சென்ற நோயாளி

ஆந்திராவில் முழங்கால் அறுவை சிகிச்சைக்காக வந்தவருக்கு மருத்துவர்கள் ரத்தம் மாற்றி ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
x
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் சத்யாலபாடு கிராமத்தை சேர்ந்த ராமைய்யா என்பவர் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பின் ராமைய்யா கோமாவுக்கு சென்றதால் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அவரை பரிசோதனை செய்ததில் , உடலில் இரண்டு வகையான இரத்த பிரிவுகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து டயாலிசிஸ் செய்யப்பட்டதால் ராமைய்யா இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார், இந்நிலையில் தவறான சிகிச்சையால் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு தேவஸ்தான மருத்துவமனை 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்தார்.. போலீஸ் விசாரணையில் இரண்டு மருத்துவமனை அதிகாரிகளும் மாறி மாறி குற்றம் சாட்டுவதால் யார் தவறான சிகிச்சை அளித்தார்கள் என்பதில் குழப்பம் நீடிக்கிறது, 


Next Story

மேலும் செய்திகள்