பாதுகாப்பு கோரி டிஜிபிக்கு, சுகாதாரத்துறை செயலர் கடிதம்

மருத்துவமனை, போராட்டத்தில் ஈடுபடாத மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்க கோரி, டிஜிபிக்கு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார்.
பாதுகாப்பு கோரி டிஜிபிக்கு, சுகாதாரத்துறை செயலர் கடிதம்
x
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில், மருத்துவர்கள் தொடர்ந்து 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களால், நோயாளிகள், போராட்டத்தில் ஈடுபடாத மருத்துவர்கள் ஆகியோருக்கு பிரச்சினை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி, டிஜிபி திரிபாதிக்கு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார். இதில், பேச்சுவார்த்தைக்கு பின்னும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து, கடிதத்தை ஏற்றுக்கொண்ட டிஜிபி, மருத்துவமனைக்கு பலத்தை பாதுகாப்பை வழங்கியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்