10 ரூபாய் நாணயம் வங்கியில் வாங்க, மறுப்பு என புகார் : பொதுமக்கள் அவதிப்படுவதாக குற்றச்சாட்டு

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் 10 ரூபாய் நாணயத்தை வங்கியில் வாங்க மறுப்பதாகவும், இதனால் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
10 ரூபாய் நாணயம் வங்கியில் வாங்க, மறுப்பு என புகார் : பொதுமக்கள் அவதிப்படுவதாக குற்றச்சாட்டு
x
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் 10 ரூபாய் நாணயத்தை வங்கியில் வாங்க மறுப்பதாகவும், இதனால் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் மற்றும் 500 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சில நாட்களுக்கு பின் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி பரவி வந்தது. பேருந்து மற்றும் கடைகளிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க பலர் மறுத்து வந்தனர். இந்நிலையில், தற்போது ஓமலூரில் பல வங்கிகளிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்