ஆண்டிப்பட்டியில், பயிற்சி வனவர் தூக்கு போட்டு தற்கொலை

ஆண்டிப்பட்டியில், பயிற்சி பெற்று வந்த வனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிப்பட்டியில், பயிற்சி வனவர் தூக்கு போட்டு தற்கொலை
x
மதுரை மாவட்டம் பொன்னகரத்தை சேர்ந்த விஜயநாராயணன், ஆண்டிப்பட்டி வனவியல் கல்லூரியில் பயிற்சி பெற்று வந்தார். குரூப் 2 தேர்வில் நண்பர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், விஜயநாராயணன் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த விஜயநாராயணன், கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் தோல்வி அடைந்ததால் பயிற்சி வனவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்