"கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்க வேண்டாம்" : உயர்நீதிமன்றத்தில் அதிமுக பிரமாண பத்திரம் தாக்கல்

கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாது என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்க வேண்டாம் : உயர்நீதிமன்றத்தில் அதிமுக பிரமாண பத்திரம் தாக்கல்
x
சட்டவிரோத பேனர் தொடர்பான அவமதிப்பு வழக்கு, சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட கோரி சுபஸ்ரீயின் தந்தை ரவி தொடர்ந்த வழக்கு உள்ளிட்டவை, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கை, காவல் துறையினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சுபஸ்ரீ மரண வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்க வேண்டாம் என கட்சியினருக்கு அறிவுறுத்தி இருப்பதாக அதிமுக தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த டிராபிக் ராமசாமிக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பேனர் வைக்க அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தான் உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்தனர். சுபஸ்ரீயின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என தெரிவித்த நீதிபதிகள், விபத்து குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஏன் உத்தரவிட வேண்டும் என கேள்வி எழுப்பினர். கூடுதல் இழப்பீடு தொடர்பாக மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகலாம் என அறிவுத்திய நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்