கீழடியில், சுடுமண் குழாய்கள், வடிகட்டி கண்டெடுப்பு - தமிழக தொல்லியல் துறை அறிக்கை

கி.மு. 6 நூற்றாண்டிலேயே நீர் மேலாண்மையில், தமிழர்கள் சிறந்து விளங்கியதற்கான சான்று கிடைத்துள்ளதாக தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
கீழடியில், சுடுமண் குழாய்கள், வடிகட்டி கண்டெடுப்பு - தமிழக தொல்லியல் துறை அறிக்கை
x
 சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் தொல்லியியல் ஆய்வில், இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் நாகரீக வாழ்விற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. உறை கிணறு, முதுமக்கள் தாழி, சுடு பாண்டங்கள், ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ஒன்றோன்று பொருந்தக் கூடிய இரண்டு சுடுமண் குழாய்கள், வடிகட்டி போன்ற அமைப்புகள் கிடைத்துள்ளன. கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே நீர் மேலாண்மையில், தமிழர்கள் சிறந்து விளங்கியதை காட்டுவதாக தமிழக தொல்லியல் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கல் கட்டுமானம், வடிகால் அமைப்பு, ஆகிவற்றின் தொடர்ச்சியாக இது கிடைத்துள்ளது. இவை, முதிர்ச்சியடைந்த சமூகத்தின் முன்னேறிய தொழிலநுட்ப வளர்ச்சி என்பதை பறைசாற்றுகிறது என்றும், இந்தச் சான்றுகள், கீழடியில் நகர நாகரிகம் சிறப்புற்று விளங்கியதற்கு வலுவூட்டுவதாகவும், தொல்லியல் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்